யாழ் பல்கலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!📸
திலீபனின் முன்னால் வெட்கித் தலைகுனிந்து நிற்கும் காந்தி தேசம் தியாக தீபத்தின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழர் தாயகத்தில் வலிந்து போரைத் திணித்துக் கொண்டிருந்த இந்திய இராணுவத்திற்கு, சிறிலங்கா அரசுக்கும் எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தன்னுயிர் நீத்த மருத்துவ மாணவனும் போராளியுமான தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (26.09.2024) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இவ்வாண்டும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினரால் உணர்வெழுச்சியுடன் காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்த தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Thileepan #thileepananna #remembrance #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners
கருத்துகள் இல்லை