லன்டனில் நிதி கணக்கீட்டு முகாமைத்துவ கற்கையில் கலாநிதி பட்டம்- யாழ் மக்களுக்கு பெருமை!

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணக்காளர் அண்ணாமலை கலைச்செல்வன் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிதி கணக்கீட்டு முகாமைத்துவ கற்கையில் கலாநிதி பட்டத்தை பூர்த்திசெய்து யாழ்ப்பாண மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.



கணக்காளர் சேவையில்

வடமாகாண ஆளுநர் செயலகம், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதான கணக்காளராக பணியாற்றும் இவருக்கான பட்டமளிப்பு எதிர்வரும் 30ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.


ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றிய கலைச்செல்வன், கணக்காளர் சேவையில் சித்தியடைந்து கணக்காளராக சேவையில் தன்னை இனைத்துக்கொண்டார்.


பின்னர் அவ் சேவையில் 

இருந்து கொண்டு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற லண்டன் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றமை அரச சேவையில் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாகும்.


ஆசிரியர் தினமான நாளை காலை 10 மணிக்கு கணக்காளர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர்கள், அவரது ஊர் மக்கள், நலன் விரும்பிகள் இணைந்து யாழ்ப்பாணம் ஆவரங்கால் ஆதவன் மண்டபத்தில் பராட்டு விழாவை ஒன்றை நடாத்தவுள்ளனர்.


இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றபோது கருத்து தெரிவித்த பழைய மாணவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான அ.தர்சன் இதனை தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் ஆவரங்காலை சொந்த இடமாகவும் ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம் மற்றும் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியில் கல்வி பயின்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையில் பட்டம் பெற்று ஆசிரியர் சேவையில் இணைந்த இவர் கணக்காளர் சேவையில் சித்தியடைந்து வவுனியா பிரதேச செயலகம், வடமாகாண பொலிஸ் திணைக்களம் என்பனவற்றில் கடமையாற்றியிருந்தார்.


தற்போது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பிரதம கணக்காளராக செயல்படுவதுடன் வடமாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் என்பவற்றிலும் கணக்காளராக சேவையில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.