யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!
இன்று (06) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேல், சப்ரகமுவ, வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனர்த்தம் குறித்தான தகவல்களை வழங்குவதற்கு DMC, 117க்கு அழைக்கவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(06 அக்டோபர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு - 06 அக்டோபர் 2024 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது)

.jpeg
)





கருத்துகள் இல்லை