உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்!


அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட உர மானிய கொடுப்பனவு தேர்தலின் பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.