சனாதிபதி அநுரவுக்கு நாமல் விடுக்கும் சவால்!


'நாங்கள் திருடர்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கும் நேரம் இது. இயலும் என்றால் நிரூபித்துக் காட்டுங்கள்'

-நாமல் ராஜபக்ஸ சவால்


உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் ராஜபக்க்ஷவினர் பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சவால் விடுத்துள்ளார்.


சனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, பல வருடங்களாக தனது குடும்பம் பொதுப் பணத்தை திருடியதாக கூறிவந்தார்.


அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.