ரவை கோதுமை ஊத்தாப்பம் செய்வது எப்படி ?
தேவையான பொருள்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை, உப்பு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து எடுத்துக் கொள்ளவும்
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்
தேங்காய் சட்னியுடன் பரிமாற, சுவையான ரவை கோதுமை ஊத்தாப்பம் தயார்....
#திண்டுக்கல்சமையல்
கருத்துகள் இல்லை