வன்னித்தேர்தல் தொகுதியில் த.தே.ம.மு எனும் பேரியக்கத்தின் முதன்மை வேட்பாளராக களம் !
நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எனும் பேரியக்கத்தின் முதன்மை வேட்பாளராக களம் காண்கின்றேன்.
நாங்கள் யார் என்பதை இந்த தேசத்தை ஆழமாக நேசிக்கும் எமது மக்கள் நன்கறிவார்கள்
நாம்...
♦இந்த மண்ணில வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
♦இந்த மண்ணில வளர்ந்திருக்கிறோம்
♦இந்த மண்ணின் அத்தனை ஊடாட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறோம்
♦இந்தமண்ணிலதான் மக்களோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறம்
♦இந்த மண்ணிலதான் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கிறம்
♦ஒருபுறம் அரசியல் உரிமைக்காகவும்
மறுபுறம் எமது மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் எமது தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறம்
இந்த மண்ணுக்கு தொடர்பில்லாதவர்கள் இந்த மண்ணை ஆளத்துடிக்கும்போது
இந்த மண்ணிலே
ரத்தமும் சதையுமாக பின்னிப்பிணைந்து இந்த மக்களின் துன்ப துயரங்களில் சதா பங்கெடுத்துப்பயணிக்கும் நாம் இந்த மண்ணில் அதிகார உரிமைக்காக களம்காண்பதில் என்ன தவறு?
இம்முறை ஒரு மித்து பேராதரவு தாருங்கள் மாற்றம் என்பது உங்கள் ஒவ்வொருவரிலிருந்தும் தொடங்கட்டும் உறவுகளே
நன்றியுடன்
எஸ்.தவபாலன்
கருத்துகள் இல்லை