ஒரு சில நேரங்களில் ஒரு சில மனிதர்கள்!


இலையில் விழுந்து மடிந்து கொண்டிருக்கும் நீர்த்துளி கேட்டது

இலையே நலமா என்று.....

நீ வரும் வரைக்கும் நலமே 

நீ வந்த பின்னர் இல்லை

என்று கூறியது இலை....


சற்றுப் பொறு நானும் வருகிறேன். 

பேசிக்கொண்டே மடியலாம் என்றது 

நன்கு பழுத்த சருகான இலை.


எதற்கு சொல்கிறாய் நான் வந்த பின்னர் நலமில்லை என்று கேட்டது மழைத்துளி... 


என்னை விழவைத்ததே நீதானே 

என்றது இலை.


எப்படி என்றது நீர்....


காய்ந்திருந்தேனே தவிர 

விழும் நிலையில் இருக்கவில்லை.


ஆனால் நீ வந்து என்னை ஈரமாக்கி 

தளரச் செய்து விட்டாய்.


அதனால் இருவரும் சேர்ந்து மடியலாம் மண்ணோடு என்றது.


அப்போது தான் நீருக்குப் புரிந்தது உண்மை.....


நான் நேராக நிலத்தில் விழுந்திருக்கலாமே ஏனிந்த 

இலையில் விழுந்தேன்.....


என்று சற்று சஞ்சலம் அடைந்தது நீர்...


அப்போது பிரபஞ்சம் கூறியது இது இயற்கையின் நியதி இவை இப்படித்தான் நிகழும் என்றால் அப்படித் தான் நிகழும்.....


ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரு சுழற்சி தான் இந்த வையகம் என்றது....


உண்மையென உணர்ந்து கொண்ட இலையும், நீரும் தரையில் விழுந்து மடிந்தது.....


இப்படித்தான் சில மனிதர்கள் வாழ்வும்...

யார் வருகிறார்கள் ஏன் வருகிறார்கள் என்று தெரிவதில்லை சில சமயங்களில்...


ஆனால் ஏதோவொன்றை சொல்லிச் செல்கிறார்கள்.....

 

அதைப் புரிந்து கொள்ள 

மனப் பக்குவம் தான் 

தேவை இங்கே....


அனுஹரி- வதனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.