தமிழ்தேசியம் என்றால் என்ன? -நாங்கள் செய்கின்ற அரசியல் சரியானதா?
(02.10.2024) தந்தை செல்வா கலையரங்கில் மாலை 3 மணியளவில் ”பொது அழைப்பில்” பல்வேறு தரப்பில் இருந்தும் இணைந்த நேரடி அரசியலில் ஈடுபடாத "சுயாதீன அரசியல்" ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த ஒன்றுகூடலில்
-தமிழ்தேசியம் என்றால் என்ன?
-நாங்கள் செய்கின்ற அரசியல் சரியானதா?
-அரசியல் வெறுமனே ஒரு தரப்பினருக்கு மட்டுப்பட்டதா?
-தமிழ்த்தேசிய பாரம்பரியக்கட்சிகள் எந்தவகையில் முறைதவறுகின்றன?
-சிங்கள தேசியக்கட்சிகளுக்கு வாக்குகள் கைமாறுவது ஏன் ? அதை அனுமதிக்கலாமா?
-பெண்களுக்கு உரிய இடம் அரசியலில் கிடைக்கிறதா?
-மாற்றத்தை விரும்புபவர்கள் சுயேட்சையாக போட்டியிடுவது தவறா?
-மாற்றம் என்பது என்ன கருதப்படுகிறது?
- பல்வேறு அமைப்புகக்கள் உருவாகி தோல்வியடைந்தபின் அது பற்றிய மீளாய்வு செய்யப்படுகின்றதா?
-தொடர்ந்து சவால்களுக்கும் தோல்விகளுக்கும் பயந்து ஒதுங்கியிருப்பது சரியா
-அரசியல் என்பது எதற்கானது ?
-நாட்டில் நிகழ்ந்தது மாற்றமா ?
-புதிய மாற்றத்தின் கீழ் பலரும்போவதால் அம்மாற்றத்தில் எதிர்காலத்தில் நிகழும் மாற்றத்தில் தமிழருக்கு என்ன அபாயம் காத்திருக்கும் ?
இவ்வாறான பல கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான கருத்துக்கள் பரிமாறப்பட்டன! பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதனால் ஒருபக்கமாக இல்லாமல் பரந்த விவாதமாக ஒரு முடிவுக்கு வர முடியாத கலந்துரையாடலாகவே இருந்தது. ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்கள் ஆதங்கங்கள் பகிரப்பட்டது.
இறுதியில்
1.)தமிழ்த்தேசிய அரசியல் சார்ந்து
இந்த தேர்தலில் பாரம்பரியக்கட்சிகள் சுயேட்சைகள் தமது வேட்புமனுக்களில் பழையவர்களை தவிர்த்து இளையவர்கள் பெண்களை கூடுதலாக புகுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
2) அதேநேரம் தேசியக்கட்சிகளையும் அவர்கள் சார்ந்தவர்களையும் தவிர்த்து , மாற்றங்களை உள்வாங்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை தமிழ்த்தேசியம் சார்ந்த சுயாதீனக்குழுக்களை அவர்களது வேட்பாளர்களின் பட்டியலை பரிசீலித்து புறந்தள்ளவேண்டியவர்களை கவனித்து மக்கள் சரியான வகையில் தேர்தலில் உறுப்பினர்களை தேர்வு செய்ய ஊக்குவிக்க வலியுறுத்தப்பட்டது.
3)பாரம்பரிய கட்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தாத சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் உரிய வகையில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பது அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த கோரப்பட்டது.
4)இன்று கூடிய தரப்பினரின் ஆதரவுடன் தொடர்ச்சியாக செயற்பட்டு பெண்கள் இளையவர்களை பெரிதும் உள்வாங்கி தமிழ்த்தேசியத்தின் அரசியல் கூறுக்கு அப்பாலும் உள்ள கூறுகளை மேம்படுத்துவதற்கும் அடித்தள மக்களினது பங்கேற்பை உறுதிசெய்வதற்கும் உரிய செயற்பாட்டு குழுமத்தை கட்டமைந்த ரீதியில் அமைத்து விசாலப்படுத்துவது என்றும் உறுதி கூறப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் வடக்கின் பல பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர். #மாற்றம் #தமிழ்த்தேசியம்
கருத்துகள் இல்லை