பியூமி ஹன்சமாலியிடம் விசாரணை!!

 


நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அதன்படி நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் BMW ரக கார் பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இருந்து வாங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.


இந்நிலையில் அது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #TamilNews   #TamilDailyNews   #Website   #TamilnaduNews  #News_Paper   #Tamil_Nadu_Newspaper  #Online   #BreakingNews2024 #NewsHeadlines    #LatestUpdates #tamilcinema    #indian    #WorldNews   #TamilFilm   #Jaffna    #Kilinochchi   #Mannar   #Mullathivu  ##Batticaloa   #kandy   #SriLanka   #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.