ங்கள் நகம் கடிப்பதற்கான காரணம் என்ன..?

 


நீங்கள் நகம் கடிப்பதற்கான காரணம் என்ன..? இந்த பழக்கத்தை கைவிடுவது எப்படி..?


நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் சில தவறான பழக்கங்களில் ஒன்றுதான் நகம் கடிப்பது. பிறருடன் கலந்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் பெரும்பாலும் நகம் கடிப்பதில்லை. ஆனால், தனியாக அமர்ந்திருக்கும் சூழல் அல்லது எதாவது வேலை செய்து கொண்டிருப்பதன் ஊடாக நகம் கடிக்கின்றனர்.


நகம் கடிப்பது தவறான பழக்கம் என்பதை உறுதியாக சொல்ல முடிகின்ற அதே வேளையில், அதற்கு இதுதான் காரணம் என்று ஒற்றை விஷயத்தை சுட்டிக்காட்ட முடியாது. ஏனென்றால் சிலர் எந்தக் காரணமுமே இல்லாமல் இதனை ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு கவலை அதிகரிக்கும் சமயத்தில் அல்லது பதற்றம் அதிகரிக்கும் சமயத்தில் நகம் கடிப்பது வாடிக்கையாக இருக்கிறது.


எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும்போது கூட நகம் கடிப்பவர்கள் உண்டு. மருத்துவ உலகில் இதனை ஒனிகோபேஜியா என்று குறிப்பிடுகின்றனர். நாளடைவில் இந்தப் பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகும் முன்பு இதிலிருந்து விடுபட வேண்டும்.


குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் இந்த நகம் கடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. நக இடுக்குகளில் உள்ள அழுக்கு வாய் உள்ளே செல்வது, சில சமயம் நக துணுக்குகளை விழுங்குவது என பல தீமைகள் இதில் இருக்கின்றன.


சிந்தனையின்போது நகம் கடிப்பது


மிக ஆழமான சிந்தனையில் மூழ்கியிருக்கும் சமயத்தில் தன்னை அறியாமலேயே கை கொண்டு சென்று நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. குறிப்பாக குழப்பம் மிகுந்த சூழலில் சிந்திப்போருக்கு இந்தப் பிரச்சனை ஒட்டிக் கொள்கிறது.


பொறுமையின்மை, வெறுப்பு


இந்த பழக்கத்தை கை விடுவது அவ்வளவு எளிதல்ல. எப்போதெல்லாம் மனம் வெறுப்படைகிறதோ, எப்போதெல்லாம் ஏதேனும் ஒன்றுக்காக காத்திருக்கிறார்களோ அப்போதெல்லாம் நகம் கடித்தல் தானாக நடக்கும். இந்தப் பழக்கம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, கைவிட முயற்சிக்க வேண்டும்.


உளவியல் ரீதியிலான பிரச்சனைகள்


உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் கூட சிலர் நகம் கடிக்க காரணமாக இருக்கிறது. மிகுந்த மன அழுத்தம் அல்லது தனிமையில் இருப்பது குறித்த கவலை போன்றவை ஒருவரை நகம் கடிக்கத் தூண்டுகின்றன. நாம் தோற்று விட்டோம் என்ற வெறுமை உணர்வு உங்களுக்குள் இருந்தால் நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படலாம்.


கவலைக்குரியதா?


நிச்சயமாக, நகம் கடிப்பதால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.


1. சருமத்தில் அல்லது நகங்களில் நோய்த்தொற்று


2. நக வளர்ச்சி குறைபாடு


3. நகங்கள் நிறமிழந்து வெளிரிய நிலையில் காட்சியளிப்பது


4. நகங்களை சுற்றியிலும் ரத்தக் கசிவு


5. நம் விரல்களின் தசையில் இருந்து நகம் விலகிச் செல்வது


6. நகம் மெலிந்து போவது அல்லது கடினமாக மாறுவது


7. நகங்களை சுற்றியிலும் வீக்கம் அல்லது வலி போன்ற பிரச்சனைகள்.


பழக்கத்தை கைவிட என்ன செய்வது?


1. எந்த சூழல் உங்களை நகம் கடிக்கத் தூண்டுகிறது என்பதை ஆழ்ந்து யோசித்து, அந்த சூழல்களை தவிர்க்க பார்க்கவும்.


2. வாரம் ஒருமுறை நீங்களே நகவெட்டி கொண்டு நகத்தை நறுக்கிவிடவும்.


3. தனிமையில் இருக்கும்போது கைகள் இரண்டையும் கட்டிக் கொள்வது அல்லது கைகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்வது போன்றவை நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிட உதவியாக இருக்கும்.#தெரிந்துகொள்வோம் #இயற்க்கைமருத்துவம் #வீட்டு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.