இயக்குனர் கௌதம் மேனன் ஓபன் டாக்..!


 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார்.

   

இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

   

 

இதனிடையே கெளதம் மேனன் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தை 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாததால் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகினார். பிறகு ரஜினியிடம் கதையை கூறிய நிலையில் அவரும் அடிக்கவில்லை. பிறகு விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு 2016 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில தடைகளால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்து விட்டனர். ரிலீஸ் செய்வதிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் சூர்யா இருந்தப்போ அவருக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் தான் அடிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி இருந்தேன். ஆனா அது நடக்காம போயிருச்சு. பிறகுதான் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துடன் அருண் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி அவர் நடித்தார். அந்த ஃபேஸ் லுக்கை பார்த்த பிறகு தான் விநாயகம் அடித்தால் நன்றாக இருக்கும் என்று துருவ நட்சத்திரம் படத்தில் அவரை நடிக்க வைத்துள்ளோம். விக்ரம் லுக்கு வேற லெவலில் இருக்கும். நாட்டுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அசால்டாக அதனை எதிர்த்து போராடுவார் என்பதை காட்டும் கதைக்களத்துடன் துருவ நட்சத்திரம் படம் இருக்கும் என கௌதமேனன் கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.