AR ரஹ்மான் செய்த Magic…!
இந்திய சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் இயற்பெயர் அருணாச்சல சேகர் திலீப்குமார் என்பதாகும். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த ஏ ஆர் ரஹ்மான் குடும்ப வருமைக்காக தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு அந்த வாடகை பணத்தை வைத்துக் கொண்டு கீபோர்டு பியானோ போன்றவற்றை கற்றுக் கொண்டார்.
தனது 11 வது வயதில் இளையராஜா அவர்களின் இசை குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார் ஏ ஆர் ரஹ்மான். எம் எஸ் விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார் ஏ ஆர் ரஹ்மான். பிறகு தனது வீட்டிலேயே இசை கலையகத்தை அமைத்த ஏ ஆர் ரஹ்மான் விளம்பர படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது மணிரத்தினம் 1992 ஆம் ஆண்டு தான் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கு இசையமைப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
முதல் படத்தில் மூலமாகவே பிரபலமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். இந்த திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார் ஏ ஆர் ரஹ்மான். இசையின் மீது இவருக்கு இருக்கும் பற்று அளவிட முடியாதது. எவ்வளவு பெரிய இசையானாலும் அசால்ட்டாக செய்து முடிப்பவர். பல முன்னணி நடிகர்கள் படத்திற்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் பல வெற்றி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவரை ஆசியாவின் மெர்ச்சண்ட் என்றும் கூறுவர்.
இவரது இசை எவ்வளவு அபாரமாக இருக்கும் என்பதற்கு சான்றாக பல படங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு படத்தில் வரும் பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான் எந்த ஒரு இசைக் கருவியும் இல்லாமல் குரல் மூலமாக பாட வைத்து படமாக்கினார். அந்த பாடலும் ஹிட்டானது. அது என்ன பாடல் என்பதை பற்றி இனி காண்போம்.
1994 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் பிரசாந்த் ஆனந்த் அனு அகர்வால் ஹீரா நடித்து வெளியான திரைப்படம் தான் திருடா திருடா. இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்த படத்தில் வரும் பாடல் தான் ராசாத்தி என் உசுரு என்னதில்ல என்ற பாடல். இந்த பாடலில் மொத்தமாக பின்னணி இசை எதுவுமே இல்லாமல் வெறும் குரல் வைத்து பாடவைத்து அசத்தியிருப்பார் ஏ ஆர் ரஹ்மான். இது போன்ற பாடல்களை உருவாக்க அவரை தவிர வேறு யாராலும் முடியாது என்று சொல்லலாம். அவ்வளவு கேட்பதற்கு இந்த பாடல் அருமையாக இருக்கும் ஹிட் ஆகவும் ஆனது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை