யாழ் ஸ்பெஷல் சாம்பார் எப்படி.?


தேவையான பொருட்க்கள்
 


கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, சௌசௌ, நூல்கோல் கலவை – ஒரு பெரிய கப் (150 கிராம்), 


புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் (அ) நெய், 


உப்பு – தேவையான அளவு.


வறுத்து அரைக்க: 


துவரம்பருப்பு (அ) 


பாசிப்பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன். காய்ந்த மிளகாய் – 4, 


தனியா – ஒரு டீஸ்பூன், 


மிளகு, சீரகம், சோம்பு, 


மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் (எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் லேசாக வறுத்து அரைக்கவும்).


தாளிக்க: 


கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை: 


காய்கறிகளை நறுக்கி வேகவிடவும். பாதி வெந்ததும் வறுத்து அரைத்த கலவையைத் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 


கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் 2 பல் பூண்டு தட்டிப் போடலாம்.....



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.