சிறீதரன் சேர் பெரிய அரசியல்வாதி!
சிறீதரன் சேர் பெரிய அரசியல்வாதி. அவரை சிறுமைப்படுத்தக்கூடாது.
2010 இல் இருந்து யாராலும் அசைக்கமுடியாத கிளிநொச்சியின் முடிசூடா மன்னன் சிவஞ்ஞானம் சிறீதரன்.
ஆளும்தரப்பு நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக இருந்தார். - சொகுசுவாகனங்களை பெற்றுக்கொண்டார் பார் லைசன்ஸ் பெற்றுக்கொண்டார்.
சுமந்திரன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழ்மக்களை ஏமாற்றி கொண்டுவர செய்த முயற்சியை இவர் எந்த சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை விமர்சிக்கவில்லை.
சம்பந்தர் ஆளும்தரப்பினதும் இந்திய தரப்பினதும் நிகழ்ச்சிநிரலின் படி பல தமிழ்த்தேசிய துரோக வேலைகளை செய்தபோதெல்லாம் சிறீதரன் வாயே திறக்கவில்லை.
சுமந்திரன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை க்கு சர்ததேச விசாரணை தேவையில்லை என்றும் விசாரணை முடிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்களை செய்தபோதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்தவர்.
அதற்கும் அப்பால் போய் சுமந்திரனை அன்ரன்பாலசிங்கத்திற்கு நிகரானவர் என்று பட்டத்த்னையும் பொது வெளியில் சூட்டினார்.
இந்திய நிகழ்ச்சிநிரலுக்கு திரைமறைவில் அனுசரணையாளாராக இருக்கிறார்
வாய்திந்திருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்.
பதவியை தக்க வைக்க வாய்மூடி மௌனியாக இருந்தார்.
சம்பந்தர் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் பெருத்த வேறுபாடில்லை.
சம்பந்தரும் சுமந்திரனும் வெளிப்டையான துரோக அரசியல் செய்கிறார்கள். ஆனால் சிறீதரன் எல்லாம் திரைமறைவில்......
ஆனால் சிறீதரன் கடந்த 14 வருடமாக பாராளுமனற உறுப்பனராக இருக்கிறார்.
அதன் அர்த்தம் கிளிநொச்சி மக்கள் துரோக மான தலைவரைதான் விரும்புகிறார்களா? இல்லை. பிற எப்படி?
அதுதான் சிறீதரனின் இராஜதந்திரம்....
அவர் கிளிநொச்சியில் புலித்தேசிய அரசியல் பேசுவார்.......
பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய அரசியல் பேசுவார்........
மாவீரர் தினத்தில் பிரபாகரன் போல நிண்டு விளக்கு கொழுத்துவார்
சிறீதரனின் துரோக அரசியல் வெளிபப்டையானது அல்ல.............
அது திரைமறைவில் தான் நடக்கிறது.
சிவஞ்ஞானம் சிறீதரன் ஒரு புலித்தோல் போர்த்த நரி -
எப்போது உணர்வார்கள் கிளிநொச்சி வாழ்மக்கள்.
உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் கிளிநொச்சியில் சரியான அரசியலை செய்யத்தொடங்க வில்லை.
அதனால் தான் சிறீதரன் அரசியலில் உயிர்வாழ்கிறார்.
இந்த முறையும் அவர் வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பனராவார்.
மக்களை ஏமாற்றும் கலை அவருக்கு கைவந்த கலை.
வாழ்க சிறீதரன் சேர்..
கருத்துகள் இல்லை