அரசியல் இயக்கத்தின் முதுகெலும்பு என்றல் அது திரு செ. கஜேந்திரன் அண்ணை தான்.!📸

 


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்னும் அரசியல் இயக்கத்தின் முதுகெலும்பு என்றல் அது திரு செ. கஜேந்திரன் அண்ணை தான்.


எங்கெல்லாம் தமிழன் நசுக்கப்படுகினோ அங்கெல்லாம் முன்னரங்கில் நின்று  எதிரிகளை கதறவிடுவார்.


தமிழ்த்தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க   செ. கஜேந்திரன் அண்ணை அவர்கள் தன்னையே ஒரு தூணாக நிறுத்தித்தியிருக்கிறார்.


தான் ஒரு எம்பி என்ற நிலையை கடந்து ஒரு சாதாரண மனிதன் போல எளிமையாக இருப்பார். கட்டளையிடும் மனிதராக இருப்பதை விட செயற்படும் மனிதராகவே இவரை அதிகம் காணலாம்.


தனியொரு மனிதனாக துணிந்து அதிகார வர்க்கத்தின்  எந்தவொரு நிலையையும் எதிர்கொள்ளும் மன தைரியம் எப்பொழுதும் இவரிடம் இருக்கிறது. அந்த தைரியம் தான் பல இடங்களில்  இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதிகளின் மூக்கை உடைத்திருக்கின்றது.


தமிழினத்தின் உயிரான தேசியத்தலைவர் #மேதகு "அண்ணை" அவர்கள் தந்து விட்டுப் போன பொக்கிசங்களில் கஜேந்திரன் அண்ணனும் ஒருவர்.


இவர் போன்று தமிழ்த்தேசியத்தையும் இன விடுதலையையும் உயிராக நேசிப்பவர்களுக்கு சொகுசாக வாழத்தெரியாமல் இல்லை.


 இனத்தின் விடுதலைக்காகவும் மண்ணின் விடுதலைக்காகவும்  தங்களுக்கு கிடைக்கும் மாலை மரியாதைகள் அனைத்தையும் துறந்து அரசியல் களத்தில் போராடும் அரசியல் போராளிகள் இவர்கள்.


இவர்கள் என்றும் எம் இனத்துக்கு தேவையானவர்கள்.  இவர்களின்  கரங்களை பலப்படுத்துவோம்.


-நிறஞ்சன்-


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.