கத்திரிக்காய் திரட்டல் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் :
தேங்காய் எண்ணெய் - 150 மில்லி, கத்திரிக்காய் - 200 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 100 கிராம், முழு நிலக்கடலை - 150 கிராம், மிளகு - 2 டேபிள் ஸ்பூன், சோம்பு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், தக்காளி - 200 கிராம், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 3
செய்முறை :
வாணலியில் தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் முழு நிலக் கடலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய அனைத்தையும் நன்றாக அரைக்கவும். எண்ணெய் ஊற்றி, சிறிது சோம்பு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். கத்திரிக்காயைக் கழுவி, சிறு துண்டங்களாக்கிச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். உப்பு ருசி பார்த்து இறக்கவும்.....
கருத்துகள் இல்லை