பிரபலமடைந்தார் ஸ்ரீதிவ்யா!


 ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. தனது மூன்று வயதில் பாரதி என்ற குழந்தைகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது சினிமா கேரியரை ஆரம்பித்தார் ஸ்ரீதிவ்யா.

   

2019 ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய தெலுங்கு காதல் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா. அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா. இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் ஸ்ரீதிவ்யா. இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

   

தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரத்துரை, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், மருது, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் ஸ்ரீதிவ்யா. தற்போது இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கும் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

மெய்யழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் தற்போது ஸ்ரீதிவ்யா பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஸ்ரீதிவ்யா ரொம்ப நல்லா நடிப்பாங்க. ஹோம்லியான கேரக்டர் அவங்களுக்கு ரொம்ப செட்டாகும். அவங்களுக்குன்னு செப்பரேட்டா ஃபேன் பேஸ் இருக்காங்க. ஆனா நடுவுல கொஞ்ச நாள் ஸ்ரீதிவ்யா ஏன் நடிக்காமல் போனாங்க அப்படின்னு எனக்கு தெரியல என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.