புத்துணர்ச்சி என்று தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு குளியல் போட்டால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும். சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது பிடிக்காது. பெரும்பாலானோர் சுடுதண்ணியில் தான் குளிக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் சுடு தண்ணீரில் குளித்தால் தான் உடலுக்கும் மனதிற்கும் சுகமாக இருக்கும். புத்துணர்ச்சி தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.
குளிர்காலத்திலோ, உடம்பு சரியில்லை என்றாலோ, உடல் அசதியாக இருக்கிறது என்றாலோ வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் தினமும் நீங்கள் வெந்நீரில் குளிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் உடம்புக்கு நல்லது கிடையாது. ஆண்கள் தினமும் சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தால் அவர்கள் ஆண்மைக்கு பிரச்சினை வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் சுடுதண்ணீரில் தினமும் குளிக்கும்போது நம் சருமம் வறண்டு மென்மைத்தன்மையை இழந்து விடும். சூடான தண்ணீரை தலையில் ஊத்தி குளிக்கும் போது அது முடியின் வேர்களை வலுவிழக்க செய்து முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்.
சென்சிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு வெந்நீரில் தொடர்ந்து குளிக்கும்போது கண்டிப்பாக அலர்ஜி போன்றவை ஏற்படும். மேலும் சுடு தண்ணீரில் தினமும் குளிப்பவர்களுக்கு இளமை தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும். வெந்நீரில் குளித்து பழகி விட்டால் அதுக்கே அடிமையாகி விடுவார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் அவர்களுக்கு சேரவே சேராது.
ஆனால் உண்மை என்னவென்றால் நம் உடல் வெப்ப நிலைக்கு குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நல்ல பலனைக் கொடுக்கும். இரவு முழுவதும் தூங்கி எழும்பும் போது நம் உடம்பு சூடாக இருக்கும். அப்போது குளிர்ந்த நீரால் குளிக்கும் போது உடல் சூடு தணியும். உடல் சுறுசுறுப்பாகவும் இயங்கும். இரண்டு நாட்கள் குளிர்ந்த நீரில் குளித்து பார்த்தால் உங்களுக்கே மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை