பெருமளவில் சிக்கிய இலத்திரனியல் சிகரெட்டுகள்!!
20 இலட்சத்து 60 ஆயிரத்து 636 ரூபா பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று முன் தினம்( 5) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நீர்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து கடந்த 5 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகயிலிருந்து 1,105 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சந்தேக நபருக்கு எதிராக 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை