இஸ்ரேல் செல்லும் மக்களுக்கான அறிவிப்பு!!
வேலை நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவிருக்கும் இலங்கையர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக உலகில் பதற்றம் நிலவுகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு அவர்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அதேசமயம் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எவரும் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையினை விடுக்கவில்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை