நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக மேற்படி கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
அவரது அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் பத்மன் சூரசேன, ஷிரான் குணதிலக, அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (22) வழங்கியிருக்கின்றது.
இது தொடர்பான நீதிமன்ற விளக்கம் இன்று (23) உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் எனத் தெரிகின்றது. அதேவேளை மனுதாரர்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை