சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்..!
மன்னார் (Mannar) - யாழ்ப்பாணம் (Jaffna) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிப்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
அத்துடன் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக பாலத்தில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் - வல்லைப் பாலமும் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
கடந்த (12.10.2024) அன்று வல்லைப் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்
#jaffnanews #srilanka #NewsUpdate #Kilinochchi #vanni
கருத்துகள் இல்லை