இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்புமனு தாக்கல்!

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை சற்று முன்னர் கையளித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

மேலும், எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.