தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!


தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.


யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனும், சக வேட்பாளர்களாக வரதராஜன் பார்த்திபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தன் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி மற்றும் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.