இலங்கை போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்


இலங்கை போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது


 கண்டியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இ.போ.ச யாழ் சாலைக்குரிய பேரூந்தினை தனியார் நபர்கள் இருவர் வவுனியா புதிய பேரூந்துக்கு நிலையத்துக்கு முன்னால் வைத்து மறித்து, பேரூந்தில் ஏறி சாரதியையும் காப்பாளரையும் தாக்கியுள்ளார்கள்.

 சாரதி தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வவுனியா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காப்பாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதற்கு முன்னரும் 11.09.2024 ஆம் திகதி இந்த இருவரும் தான் வவுனியா சாலை காப்பாளர்கள் இருவரை வாளுடன் புதிய பேரூந்து நிலையத்துக்குள் வந்து அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ச்சியாக இவ்வாறு தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்களால் அரச பேருந்து சாரதிகள் நடத்துனர் மீது தாக்குதல்கள் இடம் பெற்று வரும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.