முக்கிய சீரியலிலிருந்து விலகிய நடிகை!!

 


மலையாளத்தில் ஒளிபரப்பாகி வந்த சிறகடிக்க ஆசை சீரியலிலிருந்து நடிகை கோமதி பிரியா விலகியுள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் மிகப்பெரிய ரீச்சை கொடுத்த இந்த சீரியல் மலையாளத்திலும் ரீமேக் செய்து ஒளிபரப்பு செய்துள்ளனர். செம்பனீர் பூவே என்ற பெயரில் மலையாளத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலிலும் நடிகை கோமதி பிரியா தான் நாயகியாக நடித்து வந்தார்.


தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் தற்போது மலையாள சீரியலிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், ஒரு புதிய பதிவில், யாருக்கும் உங்கள் வாழ்க்கையை அழிக்க அதிகாரம் கொடுக்காதீர்கள். ஆம், உங்களை அவர்கள் காயப்படுத்தலாம் அதை நீங்கள் அனுமதிக்காத வரை அவர்களால் உங்களை அழிக்க இயலாது. எப்போதுமே உங்கள் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என குறிப்பிட்டு தனது புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


நடிகை மோகதி பிரியாவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.