தாமரைக்கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி உயிரிழந்தமை தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்!!

 


தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் மாணவி பயின்ற பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.


சம்பவம் இடம்பெற்றவுடன் குறிப்பிட்ட பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கத்தை பெறுமாறு அதிகாரிகளிற்கு உத்தரவிட்டேன் என கல்வியமைச்சின் செயலாளர் ஜேஎம் திலக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையிy;


நாட்டில் இயங்குகின்ற சர்வதேச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சிற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ள அவர், எனினும் அந்த பாடசாலையிடம் விளக்க கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பது துரதிஸ்டவசமான விடயம் என கல்வியமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான பாடசாலைகளை கண்காணிப்பதற்காக நாடாளுமன்றம் சில முயற்சிகளை மேற்கொண்டபோதும் ஆனால் பொறிமுறை எதனையும் உருவாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பிட்ட பாடசாலையின் அதிகாரிகள் ஒத்துழைத்தால், தனது அதிகாரிகள் தகவலகளை பெற்று எனக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.