வெளியானது ரத்தன் டாடா எழுதிய உயில்!!
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (சுயவயn வுயவய) 1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். ரத்தன் டாடாஇ 86வது வயதில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு சொத்துக்கள் அதிகம். அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருக்கிறார். அதன் விவரங்கள், ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.
அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.
ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை