அமெரிக்க தேர்தல் எம்வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
அமெரிக்காதான் முதன்மையானது, அமெரிக்க மக்கள் நலன்கள்தான் முதன்மையானது, இதற்கு பின்னால்தான் மற்ற நாடுகள், மக்கள் தான் கூறும் சட்டம்தான் உலகத்திற்கான சட்டம்.
தான் கூறும் தீர்ப்புதான் விவாதத்திற்கு அப்பால் சரியானது.
தனது நாட்டின் ‘ஜனநாயகம்’தான் உயர்வானது, சரியானது.
வர்த்தகம், ஏனைய பணப் பரிமாற்றத்திற்கு தனது நாட்டின் நாணயம் டாலர்தான் உலக அரங்கில் பாவிக்கப்பட வேண்டும்.
உலகெங்கும் உள்ள குறைந்த ஊதியத்தை பெறும் உடல், மூளை உழைப்பாளிகளைக் கொண்டு அமெரிக்காவிற்குள்ளும், அதற்கு வெளியேயும் தனது பொருளாதாரத்தைக் கட்டியமைத்தல் என்ற சமத்துவம் அற்ற உழைப்பைச் சுரண்டும் முதலாளித்து தத்துவம்தான் மனித குல முன்றேத்திற்கு சரியானது என்ற செயற்பாடுகள்
அதற்கான திறந்த பொருளாதாரக் கொள்கை, சர்வதேசங்கள் அளவில் நிறுவனங்களை நிறுவுதல் என்பதே ஒரே வழி என்றான மேலாதிக்கங்கள்
சமாதான சக வாழ்விற்கு அப்பால் யுத்தங்கள்தான் தீர்வைத் தரும் என்ற போர்ப்பார்வை
எந்த சூழலிலும், எவ்வளவு அறத்திற்கு புறம்பான, சமூக நீதிக்கு எதிரான செயற்பாடுகளை இஸ்ரேல் மேற்கொண்டாலும் ஒரு சிறு கண்துடைப்புக் கண்டனம் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு மூக்கணாம் கயிறு போடக்கூடிய கருவி விநியோகம், நிதி உதவி, இன்ன பிறவற்றை நிறுத்துவது இல்லை.
கூடித் தேர் இழுப்பது என்பதை விட தனியாக தன்னிச்சையாக தேர் இழுப்பதான செயற்பாடுகள்….
சமத்துவம் கம்யூனிசம் என்பதே தமது முதல் எதிர் என்றான செயற்பாடுகளைத் தொடர்வதற்கான அரசுத் தலைவர் தேர்தல் இன்று
யார் தேர்தலில் வென்றாலும்… தோற்றாலும்… தேர்தலிலும் பின்பு இதுதான் பொதுவழக்காக இருக்கும் போது…..?
உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பது வீணான நேர விரயம்தான்….?
ஆனாலும் புதினம் பார்ப்பது போல் நான் உட்பட பலரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இதனை விடுத்து எமது கொல்லைக்குள் ஏதாவது நடவு செய்யலாமா என்று எமது நேரத்தை உழைப்பைச் செலுத்துவோம்.
கருத்துகள் இல்லை