அர்ச்சுனா சமூகத்ற்க்கு ஏற்றவர் அல்ல!📋

 


இலங்கை பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக சுயேட்சை குழு 17-இல் மருந்தேற்றும் ஊசி சின்னத்தில் விருப்பு இலக்கம் 4-இலக்க வேட்பாளரான த. கிருஸ்ணா அவர்கள் இன்று யாழ் ஊடக சந்திப்பில் அர்சுனாவிற்க்கான சவால்களும் ஊடக அறிக்கையும். 

" அருச்சுனாவிற்கு 48 மணி நேர அவகாசம் தாறேன் " 


" அருச்சுனா பகிரங்க விவாதத்திற்கு முன் வர தயாரா ?" 


"அருச்சுனா சமூகத்திற்கு ஏற்றவர் அல்ல "


" மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் "


"வெளிநாட்டில் இருந்து காசு வந்தது உண்மை"


"அருச்சுனாவிற்கும் எனக்கும் தொடர்பில்லை "


"பிரச்சார பணிகளுக்காக எமக்கு எந்த நிதியும் தரவில்லை" 


" அருச்சுனாவை நம்பி ஏமார்ந்து விட்டேன்" 


இன்னும் பல தகவல்களை தெரிவித்த வைத்தியர் அருச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளரான த. கிருஸ்ணா. 


 அன்பார்ந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்!


நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக சுயேட்சை குழு 17-இல் மருந்தேற்றும் ஊசி சின்னத்தில் விருப்பு இலக்கம் 4-இல் போட்டி இடுகின்றேன் என்பதை அறிவீர்கள். இந்த நிலையில் நான் சுயேட்சை குழு 17 நான்காம் (04) விருப்பு இலக்கத்தில் வேட்பாளராக தொடர்ந்து சுயாதீனமாக இருப்பேன் என்பதனையும் அறியத்தருகின்றேன். எனினும் சில முரண்பாடுகள், சர்ச்சைகள் தொடர்பாகவும் மக்களின் கேள்விகளுக்கு பதிலாகவும் விமர்சனங்களுக்குரிய தெளிவுபடுத்தலாவும் இந்த சமர்ப்பிக்கின்றேன். क அறிக்கையை மக்களுக்கு


சுயேட்சை குழு 17-இன் தலைமை வேட்பாளர் என்ற வகையில் Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கும் எனக்கும் உள்ள அரசியல் ரீதியான தொடர்பாடல் மற்றும் ஆரம்ப கால தொடர்பாடல் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது என்னுடைய கடமையும் பொறுப்பும் ஆகும்.


கடந்த July மாதம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்பவத்தின் போது சமூக வலைத்தளத்தின் ஊடாக Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்களை தெரிந்து கொண்டேன். அந்த நிலையில் July 15ம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் முதல் முதலாக Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்களை முதன் முதலாக சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து அதை எனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். அதற்கு பின்னர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் குறித்த விடயங்களை பார்வையிட்ட போது அங்கே வைத்தியர் எமது சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்தி பிரதிபலிப்பவராக நினைத்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். வைத்தியர் தன்னுடைய பொருளாதார நிலைமையை சமூக வலைத்தளத்தில் கூறிய போது அவருக்கு ஏதாவது உதவி செய்கின்ற மனநிலையில் நானும் இருந்தேன்.


இவர் ஏற்கனவே Capital Tv உடைய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தகவல்களை தெரிவித்து இருந்தார். அதனை WhatsApp Group ஒன்றிலும் பதிந்து இருந்தார்கள். அதன் பிரகாரம் அவருக்கு உதவும் நோக்கத்தில் நான் ஓர் சிறிய உதவியை செய்ய முன் வந்தேன். நலன் விரும்பிகள் விரும்பினால் உதவலாம் எனவும் கூறி இருந்தேன். அதன் பின்னர் எனக்கும் வைத்தியருக்கும் தனிப்பட்ட வகையிலோ அல்லது உத்தியோக பூர்வமாகவோ எந்தவித தொடர்பாடலும் இல்லை.


அதற்கு பின்னராக July மாதம் 30ம் திகதி நான் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போது வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியால் அதிகார துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி எனது மருத்துவ தேவைக்கான அடிப்படை உரிமை மீறலையும் சந்தித்தேன். அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு ஒன்றையும் செய்து இருந்தேன். மேலும் ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு, மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றில் முறையிட்டு அதற்குரிய விசாரணையும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை பிரச்சனை தொடர்பாக வைத்தியர் Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் என்னிடம் ஒரு தடவை தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர் குறித்த விடயம் தொடர்பாக தனது முகநூலில் நேரலை (Live) ஒன்றையும் போட்டு இருந்தார்.


அதற்கு பின்னர் சில நாட்களின் பின் ஒரு நாள் அவரிடம் SLMC-ற்கு முறைப்பாடு


செய்வதற்கான தகவல் பெறுவதற்காக ஒரு தடவை வைத்தியரிடம் தொலைபேசியில்


கதைத்தேன். இதை விட வைத்தியருக்கும் எனக்கும் எந்த வித தனிப்பட்ட, உத்தியோக பூர்வ


தொடர்பாடலும் இல்லை. பின்னர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 10.10.2024


அன்றைய தினம் மாலை சுமாராக 5.00pm மணி அளவில் எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தி “எங்கே நிற்கிறீர்கள" என்று வினாவிய போது நான் கிளிநொச்சியில் நிற்கின்றேன் என்று கூறினேன். அப்போது அவர் "மயூரன் உங்களை சந்திப்பார், ஒருக்கா கதைங்கோ" என்றும் கூறினார். அந்த நேரத்தில் மயூரன் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு என்னைச் சந்தித்தார். பாரளுமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டி இடுவது தொடர்பாக கலந்துரையாடினர் ஆரம்பத்தில் நான் மறுத்த போதும் பின்னர் அவர்களுடன் சுயேட்சைக் குழுவில் போட்டி இடுவதற்கு சம்மதித்தேன். இந்த நிலையில் 10.10.2024 அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணத்தில் Tilk hotel-இல் நடந்த வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது தான் நான் இரண்டாவது தடவையாக வைத்தியர் அர்ச்சுனா அவர்களை நேரில் சந்தித்தேன். இது முற்று முழுதாக அரசியல் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் தொடர்பால் மட்டுமே ஆகும். மறுநாள் காலை 11.11.2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கி அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.


எமது சுயேட்சை வேட்பாளர்களின் உத்தியோக பூர்வ WhatsApp Group-ல் நானும்


இருந்தேன். வேட்பாளர்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் அந்த குரூப்பில் பரிமாறப்படுவதாக இருந்தது. எனவே அன்று முதல் அந்த குரூப்பில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு தலைமை வேட்பாளர் ஆகிய Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் சரியான பதில் வழங்கியது இல்லை. குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் குறித்த நடவடிக்கைக்கு உரிய ஏற்ப்பாடுகளை செய்து தருமாறு பல தடவைகள் குரூப்பில் கேட்ட போதிலும் எதற்கும் உரிய வகையில் தலைமை வேட்பாளர் பதில் அளிக்கவில்லை. Call எடுத்தாலும் Answer செய்வது மிகவும் குறைவு. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்கான Poster, கையேடு போன்றவற்றையும் இன்றைய நாள் வரை எனக்கு தரவில்லை. ஒரு தலைமை வேட்பாளராக இருந்து கொண்டு தேர்தல் தொடர்பான வேலைகளுக்குரிய எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்து தராத நிலையில் எம்மால் பரப்புரை வேலைகளை செய்ய முடியாமல் இருந்தது.


குறிப்பாக கிளிநொச்சி வேட்பாளர் ஆகிய இராமகிருஸ்ணா அறிவன்பன் என்பவருக்கும், த.கிருஸ்ணா ஆகிய எனக்கும் கிளிநொச்சி தேர்தல் பரப்புரைகளை செய்ய விடாது திட்டமிட்டு தடுப்பதாகவே எம்மால் உணர முடிந்தது. அதனை அருச்சுனா அவர்களின் சகோதரனும் (அண்ணா) கிளிநொச்சி வேட்பாளர் இராமகிருஸ்ணா அறிவன்பனின் அப்பாவும் ஆகிய இராமனாதன் இராமகிருஸ்னா அவர்களும் இதற்கு சாட்சி ஆகும். ஆனால் சமூக வலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் எமது சக வேட்பாளர், சட்டத்தரணி கௌசல்யாக்கு வாக்களிக்குமாறு அவர்களை மட்டுமே அதி தீவிரமாக விளம்பரப்படுத்தி வந்தார். குறிப்பாக கிளிநொச்சி வேட்பாளராகிய அறிவன்பன் மற்றும் த.கிருஸ்ணா ஆகிய என்னையும் சமூக வலைத்தளம் மற்றும் நேரடியான பிரச்சார நடவடிக்கைகளில் அறிமுகம் செய்வதையோ மக்களிடம் வாக்களிக்குமாறு கூறுவதையோ திட்டமிட்டு தவிர்த்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த 25.10.2024 அன்றைய தினம் திடீரென ஏற்ப்பாடு செய்யப்பட்ட வேட்பாளர் கூட்டம் வலம்புரி ஹோட்டலில் நடந்த போது அங்கேயும் குறித்த பிரச்சனை தொடர்பான நான் சுட்டிக்காட்டி இருந்தேன். எனினும் அதற்கு சரியான பதிலை வைத்தியர் வழங்கியிருக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. ஆனால் சமூக வலைத்தளமாகிய TikTok இல் ஒருவரின் பெயரைக் கூறி அங்கே அவர்களது Live Program இல் எங்களுடைய பிரச்சனையைக் கூறுமாறும் தேர்தல் நடவடிக்கை பிரச்சாரம் தொடர்பாக அவர்கள் ஏற்பாடுகளை செய்து தருவார்கள் என்றும் WhatsApp Group இலும் Voice Message மூலம் கூறியிருந்தார். அந்த குரல் பதிவுகள் தற்போதும் வேட்பாளர்களுக்குரிய Admin Group-இல் உள்ளது.


இந்த நிலையில் கடந்த 25th திகதி வைத்தியர் கூறிய Tik Tok Live Program-இல் நான் இணைந்திருந்த நேரத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடங்கலாக உள்ள


ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினார்கள். ஏற்கனவே குறித்த அந்த TikTok நபர்கள் சுயேட்சைக் குழு 17-க்கு உரிய உத்தியோக பூர்வாமனது எனவும் ஏற்கனவே வைத்தியர் தெரிவித்திருந்தார். அந்த குறித்த Live Programme-இல் 26.10.2024 ஆகிய அடுத்த நாள் Tiktok Livfe Program-இல் இணைந்து கொண்ட வைத்தியர் என்னை அவமானப்படுத்தும் வகையில் பல கருத்துக்களை முன்வைத்தார். அத்தோடு குறித்த அந்த TikTok Live Program நடத்தும் நபர் புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன் என்ற புனை பெயரில் இருக்கும் தயாபரன் என்ற நபர் பொது வெளியில் என்னை மட்டும் அல்ல பலரையும் அவமானப்படுத்தி அவதூறு


குற்றச்சாட்டையும் பரப்பி வருகிறார்.


பாராளுமன்ற வேட்பாளராகிய என்னைக் குறித்தும் உண்மைக்கு புறம்பான பல அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு பொலீஸ் சைபர் கிரைம் (Cyber Crime) பிரிவில் சட்டரீதியாக முறைப்பாடும் செய்கிறேன். அந்த TikTok Live Program-

இல் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறியவர்களில் Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் சகோதரரான பிரான்ஸில் வசிக்கும் இராமநாதன் ரகுராம் அவர்களும் முக்கியமான ஒருவர். அனைத்திற்க்குமான ஆதாரங்கள் அவர்களின் YouTube Channel-லில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன். அத்தோடு கடந்த 29.10.2014 அன்றைய தினம் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நமது சக வேட்பாளர் மயூரன் அவர்களை அழைத்த போது அதனையும் திட்டமிட்டு தலைமை வேட்பாளர் டாக்டர் அர்ச்சனா அவர்கள் தடுப்பதற்கு முனைந்தார். ஆனால் திட்டமிட்டபடி பிரச்சாரம் நடவடிக்கைகளை நாம் செய்தோம்.


அத்தோடு குறித்த நாட்களில் வைத்தியர் அர்ச்சனா அவர்கள் மற்றும் சட்டத்தரணி கௌசல்யா அவர்கள் குறித்த தனிப்பட்ட விடயம் தொடர்பாக Call Recording வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக வைத்தியர் அதனை தன்னுடைய குரல் பதிவு இல்லை என மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த Voice Record ஒன்றில் கௌசல்யாவின் காதலர் என குறிப்பிடப்படும் நபர் "நான் செத்து விடுவேன் டாக்டர்” என்ற போது "நீ செத்துப் போடா" என்று வைத்தியர் கூறி இருந்தார்.


அவர் அவ்வாறு கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது அந்த விடயத்தில் டாக்டர் அர்ச்சுனா அவர்கள் "நீ செத்து போடா" எனக் கூறியதை பிழை என்று நான் சுட்டிக் காட்டியதை காரணமாக வைத்து Facebook Live-இல் வந்து சுயேட்சைக் குழு 17-இல் 4th விருப்பு இலக்க வேட்பாளராகிய என்னை குறித்து த.கிருஷ்ணாவிற்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என கூறி இருந்தார். இந்த கருத்தானது என்னுடைய ஆதரவாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது அது தொடர்பாக வைத்தியரிடம் சிலர் கேட்டபோது த.கிருஷ்ணா ஆகிய என்னில் நிதி பிரச்சனை ஒன்றை சோடித்து மிகவும் பொய்யாக குற்றம் சுமத்தினார். உண்மையில் நான் நிதி பிரச்சனை என்று சொன்னால் அதற்கான ஆதாரங்கள் சரியான வழியில் அர்ச்சுனா அவர்கள் நிரூபிக்க வேண்டும் என சமூக ஊடக அறிக்கை ஊடாக பகிரங்கமாக சவால் விடுகிறேன். அத்தோடு நான் சுயேட்சைக் குழு 17-இல் தொடர்ந்து வேட்பாளராகவே இருப்பேன். Dr. அர்ச்சுனா அவர்களுக்கான எனது ஆதரவை முற்று முழுதாக நிராகரிக்கிறேன்.


பலர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மற்றவர்களை அவமானப்படுத்தும் நபராகிய Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன்


நிரூபிக்க தவறும் இடத்து வாக்காளர்கள் ஆகிய பொது மக்களிடம் சுயேச்சை குழு-17 ஊசி சின்னத்தின் இரண்டாம் (02) விருப்பு இலக்கத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய


Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை அன்போடு பகிரங்கமாக வேண்டுகிறேன். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் Dr. இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் பலர் மீது ஆதாரங்கள் அற்ற முறையில் குற்றங்களை சுமத்தும் நபர் என்றே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் ஆதாரங்களை முன்வைத்து உறுதிப்பாடுத்தாது விட்டால் Dr. இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படக் கூடாது என்பதையும் பொதுமக்களிடம் பகிரங்கமாக வேண்டுகிறேன்.


இன்னும் 48 மணித்தியாலத்திற்குள் வைத்தியர் அர்ச்சுனா என் மீது குற்றச்சாட்டை


சரியான ஆதாரங்களுடன் வெளிப்படுத்த தவறினால் அவர் என்னைப் பற்றி கூறியவை


அனைத்தும் மிகவும் பொய்யான தகவல் என்று பொதுமக்கள் கருத வேண்டும். ஏற்கனவே யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ச்சுனா


நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதன் காரணமாக நீதிமன்றத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் என் மீதான


குற்றச்சாட்டுகளுக்கு


ஆதாரங்களுக்கு கூறவில்லை எனில் பொதுவாகவே அர்ச்சுனா அவர்கள் பொய்களை மட்டுமே கூறும் நபராக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஊடக அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகிறேன்.


தம்பிஐயா கிருஷ்ணானந்

பாராளுமன்ற வேட்பாளர்

பாராளுமன்ற தேர்தல் -2024

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.