மீன் ஊறுகாய் செய்முறை !!


தேவையான பொருட்கள் :


✍️மீன் ( முள் இல்லாத ஏதோ ஒரு மீன் எடுத்துக் 📝கொள்ளவும் ) 

✍️நல்லெண்ணெய் 1/4 கப் 

✍️கடுகு 1/2 tsp

✍️வெந்தயம் 1/2 tsp

✍️பச்சை மிளகாய் 3

✍️கறிவேப்பிலை 

✍️மிளகாய் தூள் 1 tsp

✍️மஞ்சள் தூள் 1/4 tsp

✍️உப்பு 

✍️கான்பிளவர் மாவு 1/2 tsp

✍️வினிகர் 1 tsp

✍️நாட்டுச்சக்கரை 1/4 tsp


📝செய்முறை விளக்கம் : 


மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் கான்பிளவர் மாவு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் ஒரு வானிலையில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை பூண்டு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதில் பொரித்து வைத்திருந்த மீனை சேர்க்கவும் சேர்த்த பின் கொஞ்சம் வினிகர் கால் டீஸ்பூன் நாட்டு சர்க்கரையை சேர்த்து கிளறிவிட்டு ஆறிய பின் ஒரு பீங்கான் ஜாடியில் மாற்றி வைக்கவும் இந்த பீங்கான் ஜாடியில் ஸ்டோர் செய்து வைப்பதால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் 


தயிர் சாதம் ரசம் சாதம் போன்ற சாப்பாடுகளுக்கு இந்த மீன் ஊறுகாய் அட்டகாசமான சைடிஷ் ஆக இருக்கும் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள் முள் கம்மியாக இருக்கும் எந்த மீனாக இருந்தாலும் இந்த ரெசிபிக்கு உபயோகப்படுத்தலாம் 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.