பிரிதல்!!
நட்பாகாலம்
காதல் ஆகலாம்
உறவே ஆகலாம் ஒருநாள்
விருப்பங்கள்
வெறுப்பாக்கலாம்
முரண்பாடுகள் காணலாம்
கருத்து பேதமாக்கலாம்
ஒவ்வாமை கூடலாம்
ஒத்துப்போகாமை ஆகலாம்
விரிசல் வர
வார்த்தைகள் தடிகளாம்
வேண்டாம் என்ற
ஒத்த வார்த்தையை
வேறு விதமாக
விதண்டாவாதம் ஆகி
விலகல் ஆகலாம்
வேண்டாம் என்ற பின்
வீண் வாதம் எதற்கு
பண்போடு , நாகரிகமாக
விலகல் அழகு
வலிகள் இருக்கத்தான்
செய்யும் ,
ஆனாலும் வலிந்து
வைக்கும் உறவு
அதிக வலி தரும்
ஆதலால்
மனிதராய் விலகுவது
மரியாதையை கொடுக்கும்
மறுபடி காணும் போது
புன்னகையாவது செய்ய சொல்லும்
ஆனால் விலகிய பின்னும்
விலதனங்கள்
வீண் வதந்திகளும்
பரப்பி உங்களை
நீங்கள் உதவாக்கரை
ஆகாதீர்கள் .
பாமா இதயகுமார்
கருத்துகள் இல்லை