யாழ் பொலிசாரால் நல்லூரடியில் 2வர் கைது!
யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்றCctv உதவியுடன் இருவரை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அரசடி நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அவர்கள் அப்பபணத்தில் 10போதை மாத்திரையும் 240மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்த இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கைது செய்த பொலிஸ் குழுவினர் தெரிவித்தனர்.
இவர்கள் போதை பொருளை வாங்குவதற்காக வீதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் இருந்து பணத்தை திருடும் பழக்கத்தினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை