மாவீரர்வாரம் : நாள் - 3
மாவீரர்வாரம் : நாள் - 3
பகைவரையும் பேணும் பண்பு
"ஆண்மை நிலைப்பது பேராண்மை மாற்றாரை
நேர்மையுடன் பேணலே மேல்"
(போர்க்குறள்)
ஆண்மைகளுக்குள் எல்லாம் நிலைத்துநிற்கக்கூடியது போரிலே பகைவரைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்யும் பேராண்மையாகும். அத்தகைய பேராண்மையுள்ளும் பகைவர்களை நீதிவழுவா நெறிமுறையில் நின்று பேணும்தன்மை மேலானது என்பது போர்க்குறளின் கருத்து. எதிரிகள் நேபாம் குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் கெடுநாற்றம் கொண்ட குண்டுகளையும் மக்களின் உயிரையும் உடமைகளையும் சிதைத்து வருத்தியபோதும், சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் பலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, மனிதாபிமானத்துடன் நடாத்தப்பட்டு எதிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். போர்க்களத்தில் மாண்ட எதிரி இராணுவத்தினரின் உடல்களைச் சகவீரர்கள் கைவிட்டுவிட்டு ஓடியபோதிலும், அவை பேணிப்பாதுகாக்கப்பட்டு அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சகல மரியாதைகளுடனும் எதிரிகளிடம் கையளிக்கப்பட்டன. இது பகைவனுக்கும் அருளும் தமிழர் பண்பன்றோ.
"பேராண்மை என்பதறு கண் ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. (திருக்குறள்)
பகைவரை எதிர்த்துப் போர்புரிதல் பெரிய ஆண்மை என்று கூறுவர். அப்பகைவர்க்குத் துன்பம் வந்தவிடத்து உதவிசெய்தலை அவ்வாண்மையின் கூர்மை என்பர்.
கருத்துகள் இல்லை