இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் நிலவும் மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை