ரொரன்ரோவில் பேரெழுச்சியோடு மாவீரர் நாள்!


ரொரன்ரோவில் நேற்று பேரெழுச்சியோடு மாவீரர் நாள் 2024 நிகழ்வானது International Centre பெரு மண்டபங்கள் இரண்டு இணைக்கப்பட்ட மாபெரும் அரங்க ஒழுங்கோடு ஒரே மேடையில் 3 அமர்வுகளாக கடலென திரண்டு வந்த மக்கள் வருகையோடு மாபெரும் எழுச்சியாக நடைபெற்றது.


முதல் இரு நிகழ்விலும் மண்டபம் நிறைந்த மக்கள் வந்திருந்தார்கள். ஆடல், பாடல், நாடகம், இளையவரின் ஆற்றல் மிக்க உரைகள் என சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன!


மூன்றாம் அமர்வில் மற்றைய இரு அமர்வுகளையும் விட ஆழிப் பேரலைபோல் அலை அலையாக மக்கள் கூட்டம் அரங்கங்களை நிறைத்து வழிந்த நிலையிலும் ஒரு கட்டத்தில் தாம் நிகழ்வுகளைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை மலர் வணக்கம் செலுத்தினால் போதும் என உறுதியோடு அரங்கிற்கு வெளியே ஒரு மணிநேரமும்

 அரங்கினுள்ளே ஒரு மணி நேரமும் என நீண்ட நெடும் வரிசையில் காத்திருந்து வணங்கிச் சென்றார்கள்!


ஒன்று மட்டும் உண்மை!


மாவீரம் வெல்லும்!

வெல்லும் வழி சொல்லும்!


விதைத்தவர்கள் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!


“மாவீரர் பெயர் சொல்லி தமிழினத்தின் வரலாறு மீண்டு எழும் என்பதை உறுதி மொழியும் காலம் இந்த நாள்!”


“ விடுதலை காணும் வரை இந்த இனம் ஓயாது!”்


பெருங்கடலில் சில துளிகள் மட்டுமாகவே இப் புகைப்படங்களின் பகிர்வு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.