பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!


நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும் நாளைமறுதினம் நள்ளிரவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். 

கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபித்துள்ளனர். அவற்றில் வாக்களிப்பு நிலையங்களை அண்மித்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள், 12ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும். 

அன்றைய தினத்துக்கு பின்னர் தேர்தல் தொகுதி ஒன்றில் பிரதான கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களுக்காக ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும். 

அன்றுமுதல் வேட்பாளர்கள் தேர்தல் தொகுதிக்கென ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வீடுகளை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த முடியும். 

எனினும் அவ்வாறான தேர்தல் அலுவலகங்களின் ஊடாக எந்தவித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

அதேபோன்று வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்குள் காணப்படும் சகல தேர்தல் அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளமை குறிபபிடத்தக்கது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.