பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட துயரம்!!
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில், சுமார் 24 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக, பிளாட்பாரத்தில் குண்டு வெடித்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது.
இருப்பினும், குறித்த ரயில் அந்நேரத்துக்கு வந்திருந்தால், பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும். தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால், முன்னதாகவே அந்த முடிவுக்கு வர முடியாது. குண்டு வெடிப்பு எப்படி நடைபெற்றது. அதேவேளை குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர் என குவெட்டா பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை