இது உண்மை!!


 இப்ப வரைக்கும் , அர்ச்சுனா ஜெயிச்சது தான் ஆகப்பெரிய பிரச்சனை மாதிரி இங்க கொஞ்சப்பேர் அதையே திரும்ப திரும்ப நொட்டிட்டு நிக்கிறீங்கள்….


நான் அவருக்கு ஆதரவு தான்….

ஆனால் அவரின்ட வெற்றியை நானே அவ்வளவாக பெரிது படுத்தவில்லை….


காரணம், அதை விட பெரிய பிரச்சனை….

NPP😖


வடக்கு மாகாணம் , ஒரு சிங்கள தேசிய கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது😖


அனுரவின் எதிர்ப்பாளன் இப்படி சொல்லவில்லை….

கடந்த காலங்களில் என் பதிவை பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்….


அனுராவின் ஒரு மிகப்பெரிய ஆதரவாளனாக இருந்து தான், நான் இப்படி கவலைப்படுகிறேன்🙃😔


இங்கே யாரில் பிழை????

கட்டாயம் யோசிக்க வேண்டும்…..


ஆனால்,,,,,

இப்பயும் வந்து நிண்டுகொண்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு போட சொன்னது நீங்கள் தானே என்று அலம்புபவர்களின் விசர் கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை….

எந்த தேர்தலுக்கு எப்பிடி யோசிக்கோணும் எண்டு கூட உனக்கு தெரியல எண்டால்…..


உன்னட்ட இத பற்றி கதைக்கிறது waste….


And….

இப்பையும் உங்கட மிகப்பெரிய பிரச்சனை அர்ச்சுனாவும், parlement live உம் தான் என்றால்….


உங்களுக்கு அரசியல் எண்டது ஒரு விளையாட்டு…. ஒரு Joke ….. ஒரு Troll….


ஆகவே, உங்களிட்டையும் இதை பற்றி கதைத்து பிரியோசனமே இல்லை…..


இது இரண்டுக்குள்ளயும் வராத என்ட வட மாகாண உறவுகளின் மனநிலையை தான் நான் கருத்தில எடுக்கிறன்….

Bcz , அவர்களின் கருத்தியல் தான் மிகவும் முக்கியம்….


இளைஞர்கள் புது வாக்காளர்களாக வாறது என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினை….. ஏனென்றால், அந்த போராட்ட வலிகள், வடுக்கள், உணர்வு, பாதிப்பு என்பன ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக இருக்கும்…. ஏனென்றால், அவர்கள் யுத்த சூழலில் வாழாதவர்கள்…..


அவர்களை பொறுத்த வரையில், கவர்ச்சிக்கு உந்தப்படும் வயது அது….. அனுராவின் கவர்ச்சி அரசியல் அவர்களை இலகுவாக கவர்ந்துவிடும்…..


நம் தமிழ் அரசியல் நாய்கள், தமிழ் தேசியம் எண்டு குலைச்சு குலைச்சு தான் , ஒரு அபிவிருத்தியும் செய்யாமல், எல்லா காசையும் தாங்கள் அடிச்சுக்கொண்டு, மக்கள ஏமாத்தினவை….


அப்ப atleast அந்த தமிழ் தேசியத்தை ஆவது இந்த புது இளைஞர்களிட்ட கொண்டு போய் சேர்த்தீங்களா????


கவலையாகவே இருந்தாலும் கூட, இப்பிடி மாறி வாக்களிச்ச இளைஞர்களில பிழை சொல்ல ஏலாது😢😔


அடுத்தது, இந்த போராட்ட வரலாறு எல்லாம் தெரிஞ்ச , பழைய ஆக்களிட்ட வருவம்…..


தமிழ் தேசியம் எங்கட உயிர் மூச்சு தான்….

ஆனால், 

இந்த தமிழ் தேசிய புராணம், அரசியல்வாதி நாய்கள மட்டும் தான் வாழ வைச்சுது…. அந்த நாய்களிண்ட பிள்ளைகள private university ல படிக்க வச்சுது….. வெளிநாடுகளுக்கு Tour போக வச்சுது….


ஆனால்…..

உண்மையில் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு , இண்டைக்கு வரைக்கும் என்ன செஞ்சுது????

நமக்காக போராடின போராளிகள் கை, கால் இழந்து , நம் வீரப்புலிகள் பிச்சை எடுக்கின்றன😡🥹

நம் சொந்தங்களுக்கு வீடு இல்ல…. நல்ல தண்ணி இல்ல…. பிள்ளைகள படிப்பிக்க வசதி இல்ல…. மின்சாரம் இல்ல….. வீதி இல்ல….. பொருளாதார ஆதரவு இல்ல….


சொல்லப்போனால்,,,,,,

ஒண்டுமே இல்ல😢


எத்தின வருஷம் , தேசியத்தில இருக்கிற உணர்வ வச்சு ஏமாற ஏலும்???

நாங்கள் ஒரு அளவுக்கு வசதியா இருக்கிறம்…. என்ன வேண்டுமெண்டாலும் கதைக்கலாம்…..


நிஜ வாழ்க்கையில் செத்து செத்து பிழைக்கிற அவர்களால இதுக்கு மேல ஏமாறவே ஏலாது எண்ட நிலமை வரேக்க…..


இப்பிடி ஒரு முடிவ தானே எடுப்பினம்😢


ஏற்றுக்கொள்ள கஷ்டமா இருந்தாலும் கூட, அவர்களிலையும் பிழை சொல்ல ஏலாது😓


ஆனால்,,,,,

மக்கள் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்….

இதிண்ட பின்விளைவுகள் போக போகத்தான் தெரியும்….

மாகாண சபை, மாவட்ட அபிவிருத்தி குழு எண்டு எல்லா இடத்திலையும் ஒரு சிங்கள கட்சியின் தலையீடு இனி இருக்கப்போகுது……

அபிவிருத்தி எண்ட பெயரில, நம் வீரப்புலிகளின் தியாகங்கள் மண்ணோடு மண்ணாகப்போகின்றன…..

உரிமை அரசியல் சாத்தியமே இல்லாமல் போகலாம்….


இப்பிடி , பிரச்சனைகள சொல்லிக்கொண்டே போகலாம்…..


நம் பழைய அரசியல் நாய்கள் அடித்து கலைக்கப்பட வேண்டும் என்ற உங்கள் முடிவு, 100% சரி…..


ஆனால் ,,,,,

மாற்றுத்தீர்வாக சிங்கள அரசியலிடம் உங்களை அடகு வைக்காமல் இருந்திருக்கலாம்…..

நல்ல ஆக்கள , எங்கட தமிழ் கட்சியிலயே தேடி இருக்கலாம்…..


நல்ல பல திட்டங்களோடு, செயல்ப்படுத்திற திறனோட, ஊசி சின்னத்தில ஆக்கள் இருந்தவை….

மான் சின்னத்தில் ஆக்கள் இருந்தவை…..

எனக்கு தெரியாமல், வேற சின்னங்களிலையும் ஆக்கள் இருந்திருக்கலாம்…..


மக்கள் நாங்கள் தான் தேடி இருக்கோணும்…..

கொஞ்சம் தொலை நோக்கோட யோசிச்சிருக்கோணும்….


நான் அர்ச்சுனா, அனுர ரெண்டு பேருக்குமே ஆதரவு….

அப்பிடி இருந்தும், 2 ஆக்களிண்ட பிழைகளையும் கூட எழுதி இருக்கிறன்…..


மற்ற அறிவுள்ள ஆக்களும், அர்ச்சுனாவ தூக்கி பிடிச்சு/ காலில போட்டு மிதிச்சு அட்டகாசம் பண்ணின நேரத்துக்கு, மிச்ச அரசியலையும் கொஞ்சம் கதைச்சிருக்கலாம்….. 

மக்களை தெளிவு படுத்தி இருக்கலாம்…..


இப்ப காலம் கடந்திட்டுது…..

இனி இதை பற்றி கதைச்சு பிரியோசனமே இல்லை….

நாங்க தெரிவு செஞ்சதுக்கு, அடுத்த 5 வருசத்த அனுபவிச்சு தொலைப்பம்…..


எல்லாம் நல்லதா நடக்கோணும் எண்டு நம்புவம்….

வேற வழியே இல்ல……


கடைசியா இப்ப யாரில தான் பிழை?????

முக்கால்வாசி பிழை, இந்த பழைய அரசியல் நாய்கள்😡

மன்னிக்கவே முடியாத தமிழீழ துரோகிகள்….

எங்கள் அடையாளங்களை சிதைத்து, எங்கள் குருதியை உறிஞ்சு பிழைத்த கேவலமான பிறப்புக்கள் தான் அந்த வெள்ளை வேட்டி நாய்கள்…..


என்றைக்கும் அந்த நாய்களை மன்னித்து விடாதீர்கள்😡🙏


மிகுதி கால்வாசி பிழையை, சமூகமாக நாம் அனைவரும் ஏற்க வேண்டும்😔📌


படித்துக்கொண்ட பாடங்களினூடாக, எதிர்காலத்தை வளப்படுத்துவதை பற்றி யோசிப்போம்✅


அனுர சுனாமியில் , ஒரு கரையோர பிரதேசம் பாதிக்கப்படாதது , மிகப்பெரிய சாதனை


மட்டக்களப்பு...


றிசி


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.