இப்படியும்!!


பாராளுமன்ற தேர்தல் மூலம் 

யாழ்ப்பாண மக்கள் பல செய்திகளை 

நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.


1) நாங்கள் இனபேதம் மறந்து தெற்குடன் கைகோர்க்கிறோம் எனும் சேதி ஆழமாக கூறப்பட்டிருக்கிறது.

தெற்கு அவர்கள் கைகளை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும்.

ஆறுதலாக அருகில் இருந்து பட்ட துன்பங்களை களைய முயலவேண்டும்.


2)பழைய பதிந்த பதிவுகளை ஓரளவு மாற்றி புதிய சிந்தனைகளை யாழ் மக்கள் விதைத்திருக்கிறார்கள்.

நாங்கள் பரம்பரையாக அந்த கட்சிக்கு தான் போடுவோம்.

புதிதாக சிந்திக்க மாட்டோம் என்பதை மாற்றி சிந்தித்திருக்கிறார்கள்.


3)ஊசி அடித்த கூத்தின் மத்தியிலும்,

ஊசிக்கு எழுந்த எதிர்ப்பின் மத்தியிலும்

ஊசி ஏதோ ஓர் செய்தியை மக்களுக்கு ஆழமாக கூறியிருக்கிறது.


3)மொத்தமாக ஊழலுக்கு எதிரான அலை ஒன்று வடபகுதியில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.


4)சங்கு அதன் படத்தை பாவித்து

 ஓரளவு வெற்றி 

அடைந்தாலும் சிறிய வித்தியாசத்தில்

தோல்வியை தழுவியிருப்பது தமிழரின் அறத்திற்கான வெற்றி. 


5)வீணையின் சத்தம் மௌனிக்கப்பட்டது

சலுகை அரசியல் புறக்கணிக்கப்படுவது நல்ல சகுனமாக தென்படுகிறது.

சலுகை அரசியலை கைவிடவேண்டும் என்பதற்கும் ஆணி அடிக்கப்படிருக்கிறது.


6)குறுகிய கால இடைவெளியில் 

சுயேட்சையில் ஊசி உட்புகுந்து ஓர் ஆசனம் பெற்றதன் மூலம் கிடைக்கும் இன்னுமோர் செய்தி

புலம் பெயர் தமிழர்களின் ஆதிக்கமும் யாழ் அரசியலில் தாக்கத்தை செலுத்துகிறது.

அவர்களையும் அரவணைத்து செல்வோம் எனும் சேதியும் முக்கியமானது.


7) சைக்கிளின் ஆசனம் குறைந்ததன் மூலம்

போலி தேசித்தின் முக்கியத்துவம்

அடிப்பட்டு போய் இருக்கிறது.

குடும்ப அரசியலும் புறக்கணிக்கப்படுகிறது.


மொத்தத்தில் ஊழலுக்கு எதிரான சாவுமணி ஒங்கி அடிக்கப்பட்டிருக்கிறது.


திசைகாட்டியே எதிர்பாராத மூன்றாவது ஆசனம் அதை பெற்றதற்கான விளைவை யாழ்மக்கள் அநுபவிக்க வழி செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம்.



கலைச்செல்வி பாஸ்கரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.