முருங்கைக்காய் மசாலா கறி தயாரிப்பது எப்படி!!!
முருங்கைக்காய் மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு கால் டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும் இவற்றுடன் ஒரு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கலாம்.
அனைத்தையும் தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு சேர்த்துக் கொள்ளவும். இந்த வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பூண்டை தோலுடனே தட்டி சேர்த்தும் கொள்ளலாம்.
இப்பொழுது பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி பழங்களை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். தக்காளி மென்மையாக வதங்கியதும். நறுக்கி வைத்திருக்கும் மூன்று முருங்கை காய்களை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். மிகவும் சிறிய துண்டாக இல்லாமல் விரல் அளவு நீளமாக நறுக்கிக் கொள்ளலாம்.
முருங்கைக்காய் நன்றாக வதங்கியதும். அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது இதனை மூடி போட்டு மூன்று நிமிடங்கள் வரை அப்படியே வேகவிடவும்.
மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடலாம். 10 நிமிடங்கள் நன்றாக கொதித்து முருங்கைக்காய் முழுமையாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி அதனை தூவி இறக்கினால் அட்டகாசமான முருங்கைக்காய் மசாலா தயார்.
கருத்துகள் இல்லை