நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் அனுப்பப்பட்ட நோயாளர்கள்!!
யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இன்று (28-11-2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவிலிருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து தரைவழியாக கொண்டுசென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை