ஆண் வாழ்வதென்பது பெரும் வரம்.!!


உறவென்பது மிக ஆழமானது....

அதிலும் 

ஆண் உலகம் 

அலாதியானது....


ஆண்

இறையியலின்

அற்புத படைப்பு...


மனுஷனில் இருந்துதான்

மனுஷி படைக்கப்பட்டாள்...


பெண்ணைப் பாதுகாக்கிற

பொறுப்பு ஆணுக்கேயானது...


ஒரு ஆணின்

அன்பின் கதகதப்பில் 

வாழ்வதென்பது

பெரும் வரம்.


கிடைத்தவர்கள்

பாக்கியசாலிகள்...


தாத்தாவாகட்டும்

அப்பாவாகட்டும்

அண்ணனாகட்டும்

தம்பியாகட்டும்

தோழனாகட்டும்

உறவினராகட்டும்..


எதுவாயினும் சரிதான்...

ஆண் அன்பூ

அபரிமிதமானது....


முதல் பூ மட்டுமல்ல

முதல் துளிரும் 

சிறப்புக்குரியதே....


உறவாக 

நட்பாக இருக்கிற

அத்தனை 

ஆண்களுக்கும்

இனிய ஆண்கள் தின

நல்வாழ்த்துகள்....


கோபிகை.

யாழ்ப்பாணம்

19.11.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.