வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் பரிதாப மரணம்!!

 


அடுத்த வாரம் ஐரோப்பா செல்லவிருந்த இளைஞன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தனது பிறந்தநாளை தனது நண்பர்கள் குழுவுடன் கொண்டாடிக்கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.


கேகாலை - தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட அஷான் பிரபோத என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அதேவேளைப் நண்பர்கள் குழு நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீண்ட நேரமாக மது அருந்திய பின்னர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​ அஷான் நீரில் மூழ்கியுள்ளார்.


காணாமல் போன குறித்த இளைஞரின் சடலம் நேற்று (18) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு தொழிலுக்காக செல்ல இருந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.