இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும்-ரனில்!
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை