இனிமேல்தான் என்னைப்பற்றித் தெரியும்!!

 


எதிர்வரும் 5 ஆண்டுகளும் எப்படி செயற்படுகின்றேன் என்பதை பார்ப்பீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன். இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர்.

அதற்கு பல காரணம் உள்ளது. எனக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர்.

அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. எனது தொழில் அரசியல் அல்ல. நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச ஊழியராக செயற்படும் எண்ணத்தில் இருந்தேன்.

வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்ப்படக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.