பெருந்தொகைப்பணத்துடன் சாரதி தலைமறைவு!!
மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதி ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து, சாரதி பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார்.
இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணத்துடன் தப்பிச்சென்ற சாரதியை கைது செய்வதற்காக புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பான தகவல்களை 071 85 91 608 அல்லது 071 85 91 610 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை