ஒர் இனம் தன் தேசிய உணர்வை கைவிட்டால்...?

 ஒர் இனம் தன் தேசிய உணர்வை


கைவிட்டால் அது முதலில் தன் தாய் மொழியை இழக்கும் என்னும் பொருள். தன் நிலத்தை, வளத்தை தொலைத்து நிற்கும். 


தனக்கே உரித்தான கலையை, கலாசாரத்தை, பண்பாட்டை மறந்து விடும். 

ஆண்டாண்டு காலமாக தான் பேணிவந்த பொருளாதார கட்டமைப்பை அழித்து அடுத்தவர்களால் சுரண்டப்படும், அடிமை நிலைக்கு உள்ளாகும். 


தன் வரலாற்றை தொலைத்து, வரலாற்றின் பக்கங்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 

ஆனாலும் தேசியம் பேசுவது இன்று இனவாதமாக பார்கபடுகிது. நம்மவர்களே அப்படியான எண்ணத்தோடு அலைவதை காணகூடியதாக உள்ளது. 

படித்தவர்கள் என்று தம்மை தாமே கூறி கொள்ளும் தற்குறிகள் சிலர் (முட்டாள்கள்)சமுகத்தை தவறான பாதையில் அழைத்துச் செல்ல முனைவதை காணகூடியதாக உள்ளது. 

இனி எம்மால் முடியாது, இனி நாம் தனித்துவத்தை கைவிட்டு ஐக்கியமாகி விட வேண்டும். இவர்கள் ஒற்றுமை இல்லை. என பல சமாளிப்புக்கள். இந்த நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அவர்களின் கொள்கையிலும் சரி ஒரு ஒழுக்கம், நேர்மை அல்லது உண்மை, உறுதி உள்ளதா என்று பாருங்கள்(அனைவரையும் அல்ல). 

தம் சுய நலனுக்காக இனத்தையும், அதன் தேசியத்தையும் அதற்காக புரியப்பட்ட தியாகங்களையும், அர்ப்பணிப்பையும் காட்டி கொடுக்கும் ஈன செயலை செய்தனர், செய்து வருகின்றனர். அத்தோடு அதனை நாளாந்தம் நியாய படுத்தியும் வருகின்றனர். 


எம் சமூகத்தில் நாம் கொண்டாடும் பல கல்விமான்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகிறார்கள். எம் இனஉரிமைக்காக தம்மையும் தம் வாழ்க்கையையும் அர்பணித்த பல புத்தியீவிகள் எம்மிடையே இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களால் தான் இன்னும் எம் தேசமும், தேசியமும் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. 


எனவே இந்த அரை வேக்காட்டு அறிவாளிகளை நீங்கள் அடையாளம் கண்டு சமூகத்தில் புறக்கணிப்பு செய்யவேண்டும், இவர்கள் எம்மினத்தை அழித்து வரும் விச செடிகள், இவர்களிடம் இருந்து எம் சமூகத்தை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எம் அனைவருக்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம். 

இன்று எமக்கு தேவை இவ்வாறான அரைவேக்காட்டு அறிவாளிகள் அல்ல, எம் எதிர்கால சந்ததியை தவறான பாதையில் கூட்டி செல்லும் வழிகாட்டிகள் அல்ல. எமக்கு தேவையானவர்கள் " மாமனிதர் "துரைராஜா ஐயா, மாமனிதர் சிவராம் அண்ணை, மாமனிதர் குமார்பொன்னம்பலம் ஐயா, மாமனிதர் ரவிராஜ் அண்ணா என இவர்களைப் போன்ற இன்னும் பலர்.. இன்று இவாறான புத்தியீவிகளே எம் தேவை எனவே அவ்வாறான தலைவர்களை, ஆசான்களை எம்மிடையே அடையாளம் கண்டு கொள்வோம். 

சமுகத்தில் பல நரிககள் கடந்த காலங்களில் புலி வேடமிட்டு உலாவி வந்தன. இன்று அவை தம் வாய்களை திறந்து கத்துகின்றன(ஊளையிடுகின்றன) இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். 

எதிரிகள் என்றும் எதிரே இருப்பார்கள். 

துரோகிகள் என்றும் எம்மோடு தான் இருப்பார்கள். 


"அவாதானம் அவசியம்"

நன்றி .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.