யாழ். மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!

 


மினுவாங்கொடைப் பகுதியில் பணத்தை திருடி தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் யாழ்ப்பாண பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.


மினுவாங்கொடை பகுதியில் கடந்த 18.11.2024 அன்று கோடி ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை கைது செய்வதற்காக, கம்பஹா பொலிஸ் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பணியகத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


சந்தேக நபர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் அவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தகவல்கள் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.